தூத்துக்குடி ஆத்தூரில் முதல்வர் மருந்தகம் திறந்து வைக்கப்பட்டது
தூத்துக்குடி ஆத்தூர்
By Mervin on | 2025-02-24 20:23:07
தூத்துக்குடி ஆத்தூரில் முதல்வர் மருந்தகம் திறந்து வைக்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக வளாகத்தில் முதல்வர் மருந்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

ஆத்தூரில் தொடங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.கே.கமால் தீன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மேலத்தூர் EX ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.பி. சதீஷ்குமார் மற்றும் ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கேசவன், பாலசிங், பி.எம்.டி.முருகன், அசோக்குமார், பிச்சமுத்து, முத்து, கமலச்செல்வி வசந்தி மற்றும் ஆத்தூர் தொடக்க வேளாண்மை சங்கத்தின் செயலாளர் பூபால் மற்றும் திமுக கழக நிர்வாகிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE