அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க , தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்பி சண்முகநாதன் உத்தரவின்படி, இன்று மாநகர மேற்கு பகுதியில் டிஜிட்டல் வடிவிலான புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
நிகழ்வில் பகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். கமிட்டி பொறுப்பாளரான மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாமன்ற உறுப்பினர் மந்திரமூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், வட்ட கழக பிரநிதி உதயகுமார், வட்டக் கழகச் செயலாளர் மனுவேல்ராஜ், வட்ட கழகச் செயலாளர் மணி கணேஷ் மற்றும் அரசியல் மூத்த நிர்வாகி சேவைராஜ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்