குழந்தைகள் பாராளுமன்ற செயல்பாட்டாளர்கள் பயிற்சி முகாம் திருச்சியில் நடைபெற்றது.
தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி
By admin on | 2025-02-24 23:07:40
குழந்தைகள் பாராளுமன்ற செயல்பாட்டாளர்கள் பயிற்சி முகாம் திருச்சியில் நடைபெற்றது.

உலகம் முழுவதும் குழந்தைகள் உரிமை மற்றும் வளர்ச்சிக்கான அமைப்புகள் பல்வேறு நிலைகளில் பணி செய்து வருகின்றன.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குழந்தைகள் உரிமை மற்றும் வளர்ச்சிக்கான பணிகளை செய்து வரும் நிலையில், குழந்தைகளின் அறிவுசார் தலைமைத்துவ பண்பு வளர சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பணி செய்து வருகின்றனர்.

குழந்தைகளின் அறிவுசார் தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாக இந்திய அரசியல் சாசன உரிமைக் கல்வியை பாடமாக எடுத்துச் செல்ல, குழந்தைகள் பாராளுமன்றம் அமைத்து வழிநடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு இரண்டு நாட்கள் சிறப்பு பயிற்சி கல்வி, அதிகாரம், பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கான கூட்டமைப்பு சார்பில் திருச்சி சமயபுரத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சியில், குழந்தை பருவத்திலேயே அரசியல் சாசன உரிமைக் கல்வியினை, கற்பிக்க வேண்டிய அவசியம் குறித்து, நீம் பவுண்டேசன் இயக்குநர் லூயிஸ் எடுத்துரைத்தார். 

தொடர்ந்து குழந்தைகள் பாராளுமன்றம் அமைக்கும் வழிமுறை மற்றும் விதிமுறைகள் குறித்து கோவை விடியல் அறக்கட்டளை இயக்குநர் பிரபாகரன் பயிற்சியளித்தார். 

பயிற்சியில் திருச்சி குழந்தைகள் நடனக் கலைஞரும் பயிற்சியாளருமான வினோத் பங்கேற்பாளர்களுக்கு குழந்தைகள் விரும்பும் நடன அடவுகளை கற்றுக் கொடுத்தார்.

கிராமியக் கலை நடனங்கள், சமூக விழிப்புணர்வு பாடல்கள் உள்ளிட்டவைகளுடன் நடைபெற்ற பயிற்சியின் சிறப்பு பார்வையாளராக பரமக்குடி மலர் ஊரக நல அறக்கட்டளை இயக்குநரும், MSME கவுன்சில் மதிப்பிடு அலுவலர் பவித்ரா கலந்து கொண்டு ஊக்கமூட்டும் உரை நிகழ்த்தினார்கள்.

திருச்சி எஸ் ஏ எஸ் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஆரோக்கிய பாண்டியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,

குழந்தைகள் பாராளுமன்றங்களின் அவசியத்தையும் சில வெற்றிக் கதைகளையும் எடுத்துக்காட்டாக கூறி பயிற்சியில் பங்கேற்ற அனைவரையும் வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.

குழந்தைகளுக்கு மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையான பிரதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் விதிமுறை மற்றும் நடைமுறையை கற்பிக்கும் விதமாகவும், வாக்குரிமையின் வலிமையை உணர்த்திடும் விதமாகவும் பயிற்சியின் இரண்டாம் நாளில் நடைபெற்ற மாதிரி தேர்தலில் வெற்றி பெற்ற நீலகிரி மாவட்ட தாய் அறக்கட்டளையின் கனகவள்ளி அருள்ராஜ் தலைமையமைச்சராகவும், மதுரை மாவட்ட எஸ் எஸ் சி டி அறக்கட்டளையின் முனைவர். சின்ன முருகன் எதிர்கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளை எளிமையாக விளக்கி நல்லதொரு இந்தியக் குடிமக்களாக இக்காலத்து குழந்தைகளை வளர்க்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் பொறுப்பு என்று வலியுறுத்தி அனைவருக்கும் நன்றி கூறினார் நீம் பவுண்டேசன் இயக்குநர் லூயிஸ்.


இப்பயிற்சியில் திருநெல்வேலி மாவட்ட எஸ் ஆர் டி டிரஸ்ட் விஜயகுமாரி, டி எம் எஸ் எம் எஸ் டிரஸ்ட் அக்தர் பானு, தென்காசி மாவட்ட பிரைட் டிரஸ்ட் கீதா ஜெகதீஸ் டிரஸ்ட் செல்வி, விருதுநகர் மாவட்ட கூடம் டிரஸ்ட், மதுரை மாவட்ட எஸ் எஸ் சி டி டிரஸ்ட் தர்மராஜன், சிவகங்கை மாவட்ட விடியல் டிரஸ்ட் ரோனிக்கா, திருச்சி மாவட்ட பிக் பீஸ்ட் டிரஸ்ட் தீன தயாளன், TNDWWS டிரஸ்ட் அழகேஸ்வரி, தஞ்சாவூர் மாவட்ட RWCD டிரஸ்ட் கிருஷ்ணமூர்த்தி, தடம்பதி டிரஸ்ட் ராஜா, திண்டுக்கல் மாவட்ட வே டிரஸ்ட் முருகேஷ்வரி, RD பவுண்டேசன் வாணி, மயிலாடுதுறை மாவட்ட ரீடு பவுண்டேசன் ராமா தேவி, கள்ளக் குறிச்சி மாவட்ட அன்னை டிரஸ்ட் கிருஷ்ணமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட வுமன் சாலிடாரிடி பவுண்டேசன் அன்பழகன், விழுப்புரம் மாவட்ட மக்கள் கல்வி அறக்கட்டளை அன்பரசி, தென்னகம் அறக்கட்டளை பால முருகன், திருவண்ணாமலை மாவட்ட காமராஜ் அறக்கட்டளை ஏழுமலை, நவீனா அறக்கட்டளை புவனேஸ்வரி, நீலகிரி எவர்கிரீன் டிரஸ்ட் பேபி ரீட்டா, தாய் அறக்கட்டளை கனகவள்ளி அருள்ராஜ் மற்றும் பாண்டிசேரி அபிதி பவுண்டேசன் பிரியா உள்ளிட்டோர் முழுமையாக பங்கேற்றனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை கல்வி, அதிகாரம், பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கான கூட்டமைப்ப்பினர் சிறப்பாக செய்திருந்தனர்.



Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE