மாட்டு மூத்திரம் குடித்தால் சரியாகிவிடும் என சொல்பவர்கள் மத்தியில் என்ன சமூக முன்னேற்றம் ஏற்படுத்தி இருக்கும் - அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் பேட்டியளித்தார்
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-02-27 13:20:36
மாட்டு மூத்திரம் குடித்தால் சரியாகிவிடும் என சொல்பவர்கள் மத்தியில் என்ன சமூக முன்னேற்றம் ஏற்படுத்தி இருக்கும் - அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் பேட்டியளித்தார்

இவ்வளவு மருத்துவத்தில் வளர்ச்சி அடைந்துள்ளோம், வெளிநாட்டினர் சென்னையில் வந்து சிகிச்சை பெறக்கூடிய நிலையில் இருக்கிறோம். 

ஆனால் இந்த மாட்டு மூத்திரம் குடித்தால் சரியாகிவிடும் என சொல்பவர்கள் மத்தியில் சமூக முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் 

தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் 

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி வரையறை செய்யும்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பேறும் என தமிழக முதலமைச்சர் தளபதி அவர்கள் இது நமது தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் கூறியிருக்கிறார் தென் மாநிலம் உள்ளிட்ட பிற்பகுதியில் எல்லாம் ஆதரவு வந்திருக்கிறது பிற தலைவர்கள் எல்லாம் அதை உணர்ந்து நமது முதலமைச்சர் அவர்களின் குரலுக்கு ஆதரவாக பேசுவது நாமெல்லாம் அறிந்தது 

கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பிறப்பு விகிதம் என்பது குறைவாக உள்ளது மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி வரையறை செய்யப்பட்டால் நமது தொகுதி குறைய கூடிய வகையில் பாதிப்பு உள்ளது. தமிழகத்திற்கு ஒரு பெரிய பாதிப்பு ஏற்படும். தென் மாநிலங்களான கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை முதலமைச்சர் அவர்கள் உணர்த்தியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கூட சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் ஏனெனில் ஒன்றிய அரசினுடைய ஒவ்வொரு முயற்சியும் நம்மை ஒடுக்கக் கூடியதாக பட்ஜெட் புதிய திட்டமாக இருந்தாலும் சரி நிதி ஒதுக்கீடாக இருந்தாலும் சரி நீட்டாக இருந்தாலும் சரி புதிய கல்விக் கொள்கையை பின்பற்ற வேண்டும். அதற்காகவே கல்வி நிதியை ஒதுக்காமல் இருப்பது ஜிஎஸ்டியை வஞ்சிப்பது நாம் செலுத்தும் பணத்தை மட்டும் ஒதுக்கீடு செய்வது உத்தரப்பிரதேசத்திற்கு அவர்கள் 1 ரூபாய் செலுத்தினால் இரண்டு ரூபாய் 50 காசு உத்தரபிரதேசத்துக்கு வழங்கப்படுகிறது தமிழகத்திற்கு 29 பைசா மட்டுமே வழங்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதும் மகளிர் இட ஒதுக்கீடு செய்தல் போதும் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் வரையறை செய்யப்பட்ட பின்பு என்ன முறை நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆக இது நமக்கு பேராபத்தை விளைவிக்கும், அரசின் திட்டங்களின் விதிகளை பின்பற்றி வளர்ச்சி இலக்குகளை அடைந்த மாநிலங்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. தமிழகத்தின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் முதலமைச்சர் குரல் கொடுக்கிறார் கீதாஜீவன் கூறினார்.

மக்கள் தொகை அடிப்படையில் வரையறை மறுத்தால் 18% குறையும் எனக் கூறுகின்றனர். பிரதம மந்திரி அவர்கள் மக்கள் தொகை அடிப்படையில் வரையறை செய்தால் 100 தொகுதிகள் குறையும் என கூறினார்கள். அவருடைய நடவடிக்கை தென்னிந்தியாவை வஞ்சிப்பதாகவே தெரிய வருவதாக முதலமைச்சர் ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளார் நிச்சயமாக எந்த பாகுபாடும் இல்லாமல் தமிழ்நாட்டின் நலன் எதிர்கால சந்ததியினர் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சரோடு கைகோர்த்திட வேண்டும் என தமிழக முதலமைச்சர் முன்னெடுப்பு எடுத்து இருக்கிறார். அவருக்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டுமென அமைச்சருக்கு கீதா ஜீவன் கேட்டுக் கொண்டார். 

ஒருவேளை தொகுதியை உயர்த்துகிறோம் என்றால் கூட மக்கள் தொகை எண்ணிக்கை உயரும் ஆனால் மக்கள் தொகை 39 சதவீதம் சதவீதம் தான் தமிழகத்தினுடையது விகிதாச்சாரம் குறைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழக முதலமைச்சர் அவர்கள் கூறி வருகிறார் என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன் என கூறினார். 

அனைத்து ஒன்றிய அமைச்சர்கள் ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார் அவர் இன்னும் தெளிவாக அந்த இடத்தில் அவர் பேசவில்லை, இன்னும் தெளிவுபடுத்திட வேண்டும். இந்திரா காந்தி இறக்கும்போது இதே கோரிக்கை வைக்கும்போது மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 1976 இல் இந்த சட்டம் திருத்தப்பட்டது. 25 ஆண்டுகள் இந்த சட்டம் திருத்தப்படாது என கூறப்பட்டது. வாஜ்பாய் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் வரக்கூடாது என வாஜ்பாய் அவர்கள் கொண்டு வந்தார். 2026க்கு பிறகு முடிவு செய்யலாம் என சட்ட திருத்த முடிவு செய்யப்பட்டது. 

தென்னிந்தியாவில் பிரதிநிதித்துவம் குறைந்து விடக்கூடாது நாம் குரல் அற்றவர்களாக ஆகிவிடக்கூடாது. மணிப்பூர் பிரச்சனையை ஒன்றிய அரசு திரும்பி கூட பார்க்கவில்லை. இப்படி செய்தால் நாம் குரல் இல்லாதவர்களாக விடுவோம். அதனால் நமது உரிமையை காக்க முதலமைச்சருக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்.

எல்லா மக்களிடமும் நம் நிலைமையை கூறும்போது புரிந்து கொள்வார்கள்.

எப்படி நீட் தேர்வை பற்றி கூறினோமோ அதே குஜராத்தாக இருந்தாலும் உத்தர பிரதேசமாக இருந்தாலும் இந்தி மட்டும்தான் புழக்கத்தில் உள்ளது. அவர்களின் தாய் மொழி எல்லாம் புழக்கத்தில் இல்லை அழிந்து போனது போல் தான் ஆனால் நம்மை மட்டும் தான் மூன்று மொழி என கூறுகிறார்கள். நாம் மக்களை சந்திக்கும்போது திண்ணை பிரச்சாரமாக இருந்தாலும், துண்டு பிரசுரம் கொடுக்கும்போது சரி நம்மை வஞ்சிக்கக்கூடிய ஒன்றிய அரசின் நிலையை மக்களிடம் எடுத்துக் கூறுவோம். 

சட்டப்படி ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மீண்டும் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களது முதலமைச்சர் கோரிக்கை உள்ளது. அதனால் தான் நாங்கள் இந்த கோரிக்கையை வைக்கிறோம்.

இவ்வளவு மருத்துவத்தில் வளர்ச்சி அடைந்துள்ளோம்.தமிழ்நாட்டிற்குள் வெளிநாட்டினர் சென்னையில் வந்து சிகிச்சை பெறக்கூடிய நிலையில் இருக்கிறோம். ஆனால் இன்று மாட்டு மூத்திரம் குடித்தால் சரியாகிவிடும் என சொல்பவர்கள் மத்தியில் என்ன சமூக முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் என அமைச்சர் கேள்வி எழுப்பினார். 

வட இந்தியாவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி வளர்ச்சி அடைய வேண்டும். சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து என அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்



Last Updated by Mervin on2025-03-01 00:33:39

Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE