குழந்தைகள் பாராளுமன்றம் அறிமுகக் கூட்டம்.
தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி
By admin on | 2025-01-26 10:50:39
குழந்தைகள் பாராளுமன்றம் அறிமுகக் கூட்டம்.

இந்தியாவின் 76வது குடியரசுத் தினத்தினை அனுசரிக்கும் விதமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஒரு நாள் கருந்தமர்வு திருச்சி சமய புரத்தில் 26-01-2025 அன்று நடைபெற்றது.

குழந்தைகளின் தலைமைப் பண்பை வளர்க்கும் முயற்சியாக, இந்திய மக்களாட்சி முறையைக் கற்பிக்க குழந்தைகள் பாராளுமன்றம் வழி நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் 17 பேர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

திருச்சி தமிழ்நாடு நலிவுற்ற மகளிர் நலச் சங்கத்தின் தலைவி அமிர்தவள்ளி அவர்கள் வரவேற்று பேசினார்.

தூத்துக்குடி நீம் பவுண்டேசன் நிறுவனர் லூயிஸ் அவர்கள் கருத்தரங்க கூட்டத்தின் நோக்கம் மற்றும் குழந்தைகள் பாராளுமன்றத்தின் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார்.

தொடர்ந்து கோயம்புத்தூர் விடியல் அறக்கட்டளையின் தலைவர் பிரபாகரன் குழந்தைகள் பாராளுமன்றம் அமைப்பு முறையின் சுருக்கம் மற்றும் அடுக்குகள் குறித்தும் விளக்கினார். மேலும் தலைமைப் பொறுப்பை வளர்க்க குழந்தைகளுக்கு இந்திய அரசமைப்பு உரிமைக் கல்வியை பாடமாக எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தையும் அதற்கான சில யுக்திகளையும் எடுத்துக் கூறினார்.


மேலும் தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 30 குழந்தைகள் பாராளுமன்றம் அமைத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குழந்தைகள் பாராளுமன்றம் வழி நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மட்டும் உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு N3ED (Network for Education, Empowerment and Economic Development) உருவாக்கி, அக்கூட்டமைப்பில் ஒவ்வொருவரும் ஒருமனதாக உறுப்பினர்களானார்கள். 


களத்தில் பணிசெய்ய இருக்கும் பணியாளர்களுக்கு ஆண்டிற்கு நான்கு முறை தொடர் பயிற்சி அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அன்னை டிரஸ்ட் சக்தி அவர்கள் நன்றியுரை கூற கருத்தமர்வு இனிதே நிறைவுற்றது.

முன்னதாக திருச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு நடனம் கற்றுத் தரும் தன்னார்வ ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

நீம் பவுண்டேசன் திருச்சி மாவட்ட தன்னார்வலர் கவிதா கருத்தமர்விற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.




Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE