தமிழ்நாடு & பாண்டிச்சேரி தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் பணிகள் கடந்த சில மாதங்களாக வெகு வேகமாக நடந்தேறி வருகிறது.
இக்கூட்டமைப்பு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருவதால் தற்போது மண்டல வாரியாக ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய கன்னியாகுமரி மண்டலத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று (24-02-2025) நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு & பாண்டிச்சேரி தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் (TNPNF) நிறுவன தலைவரும் சமூக ஆர்வலருமான லயன் A. ஜெயசீலன், நிறுவன செயலாளர் S அன்பு, துணைச் செயலாளர் R. அரிமா ஆனந்த், நிறுவனப் பொருளாளர் கா. தாட்சாயணி, மண்டல பொறுப்பாளர் M. செல்வி, கன்னியாகுமரி மண்டல சட்ட ஆலோசகர் V. நாகராஜ், கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளர் J. மேரி ஜான்சிராணி, திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர் R. அந்தோணிசாமி, தென்காசி மாவட்ட பொறுப்பாளர் கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் வி. அனீஸ் மெல்வின் உள்பட கூட்டமைப்பின் தோழமை அமைப்புகளின் மாவட்ட பொறுப்பாளர்கள், தன்னார்வலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட தமிழ்நாடு & பாண்டிச்சேரி தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் கன்னியாகுமரி மண்டல உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கூட்டமைப்பின் சட்டதிட்டங்களுக்கும், நோக்கங்களுக்கும் உட்பட்டு நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கான தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நமது தமிழ்நாடு & பாண்டிச்சேரி தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொருளாளர் தாட்சாயினி நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.