தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதிநகரைச் சேர்ந்த பொன்பாண்டி மனைவி காந்திமதி(58). இவர் மடத்தூரில் உள்ள ஒரு தனியார் மீன் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 23ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு செபத்தையாபுரத்தில் உள்ள தனது உறவினர்வீட்டுக்குச் சென்றனராம். பின்னர் அடுத்தநாள் வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தாராம். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த ரூ.8ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் முத்தையாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிடிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் காளிராஜ் (23) என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் காளிராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்