தூத்துக்குடி மாநகர மக்களுக்கு இவ்வளவு புதிய திட்டங்களா.?. மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்தார் மேயர் ஜெகன் பெரியசாமி.!.
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-02-28 09:06:13
தூத்துக்குடி மாநகர மக்களுக்கு இவ்வளவு புதிய திட்டங்களா.?.  மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்தார் மேயர் ஜெகன் பெரியசாமி.!.

தூத்துக்குடி மாநகராட்சி 2025-26க்கான நிதிநிலை அறிக்கை பொதுமக்கள் பயன் பெறும் வகையிலான 41 புதிய திட்டங்களை  மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர மக்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்களை மேயர் அறிவித்தார்.

பொறியியல் பணிகள்

1.மகளிர் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் வகையில் வடக்கு மண்டல பகுதியில் புதிதாக மகளிர்க்கென பிரத்தியேக பூங்கா அமைக்கப்படும்.

2.இளைஞர்கள் நலன் கருதி 5 இடங்களில் சிறிய அளவிலான விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.

3.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி தனசேகர் நகர் பகுதியில் ரூபாய் 10.00 கோடி மதிப்பீட்டில் மைய நூலக கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது.

4.சிறுவர், சிறுமிகளை நீச்சல் பயிற்சி அளித்து தேசிய அளவில் போட்டிகளில் வெற்றி பெறும் வகையில் உரிய பயிற்சிகள் அளிக்கும் வகையில் நீச்சல் குளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

5.நம் பாரம்பரிய உணவுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் சத்தான உணவு வகைகள் கிடைக்கும் வகையிலான உணவுத் தெரு (Food Street) அமைக்கப்படும்.

6.வல்லநாட்டில் உள்ள 1.2 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய ஒளி தகடுகள்(Solar Panels) வாயிலாக தேவையான மின் உற்பத்திகளை தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொண்டு மாநகராட்சி பயன்பாட்டிற்கு போக மீதி மின்சாரத்தை மின்சார வாரியத்திற்கு ஒப்படைப்பு செய்து மின் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சூரிய ஒளி கதிர் தகடுகள் மாநகர பகுதிகளில் அமைக்கும் பணிகள் விரிவுபடுத்தப்படும்.

7.மாநகரப் பகுதிகளில் 4 குளங்களில் மழை வெள்ள நீரை சேமிக்கும் வகையில் மறுசீரமைப்பு பணிகள் செய்வதுடன் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேற்படி குளங்களை சுற்றிலும் நடைபாதைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

8.போதைப் பொருளுக்கு அடிமைபட்டுள்ளவர்களை குறிப்பாக இளைஞர்களை மீட்டெடுக்கும் வகையில் போதை மறுவாழ்வு மையம் விரைவில் அமைக்கப்படும்.

9.சமூகப் பொறுப்பு கூட்டாண்மை (CSR Fund) நிதியின் கீழ் ரூபாய் 8.00 கோடி மதிப்பீட்டில் துறைமுக கடற்கரை நவீனமயமாக மேம்படுத்தப்படும்.

10.தெற்குக் கடற்கரை சாலையில் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் நடைபாதை அமைக்கப்படும்.

11.தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் மாநகரத்தின் பிரதான சாலைகள் அனைத்தும் தூய்மையாக காட்சி அளிக்கும் வகையில் சாலையின் இருபுறமும் பேவர் பிளாக் தளம் அமைக்கப்படும்.

12.மாநகரின் குடிநீர் விநியோகத்தினை சீரமைக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பி அன் டி காலனி, கல்லூரி நகர், ராஜாஜி பூங்கா, செல்வ விநாயகபுரம், கங்கா பரமேஸ்வரி காலணி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு 24 மணி நேர குடிநீர் விநியோகம் நடைமுறை படுத்தப்படும்.

13.மாநகரப் பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்திட வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 4,5,9,10,11 ஆகிய 5 வார்டுகளிலும் மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 52,54,55,59 ஆகிய 4 வார்டுகளிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

14.மூத்த குடிமக்களின் நலன் கருதி முதியோர் பூங்கா மூன்று இடங்களில் புதிதாக அமைக்கப்படும்.

15.பூபாலராயர் புரம் சந்தை பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக CSR நிதியில் நவீன வசதிகளுடன் கூடிய மீன் சந்தை புதிதாக உருவாக்கப்படும்.

16.பாதாள சாக்கடை திட்ட பணிகளில் உந்து நிலையங்களில் அமைந்துள்ள மின் மோட்டார்களின் திறன்களை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

17.தூத்துக்குடி மாநகராட்சிற்குட்பட்ட மீனவர் வசிக்கும் 4 பகுதிகளில் சிறிய அளவிலான மின் கோபுர விளக்குகள் நிறுவப்படும்.

பொது சுகாதாரப் பணிகள்

1. மாநகர பகுதிகளில் தூய்மையான காற்றை சுவாசிப்பதை உறுதிப்படும் வகையில் 20 இடங்களில் நகர்ப்புற குறுங்காடுகள் அமைக்கப்படும்.

2.சமூக கூட்டாண்மை பொறுப்பு நிதியில் தருவைக்குளம் உரக்கிடங்கில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் மரக்கன்றுகள் நட்டு மாநகரில் தூய்மையான காற்று கிடைக்க வழி செய்யப்படும்.

3.2023 ஆம் ஆண்டிலிருந்து பிறந்துள்ள பச்சிளம் குழந்தைகளின் செவி |திறன் குறைபாட்டை உடனடியாக சரி செய்திடும் வகையில் மாநகராட்சி செவிலியர்கள் மருத்துவர்கள் நேரிடையாக வீட்டிற்கு சென்று உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு குறைபாடுகள் சரி செய்ய உரியமருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

4. மக்களை தேடி மருத்துவத் திட்டத்தினை துரிதப்படுத்தி பொதுமக்களின் உடல் சார்ந்த பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு உறுதி செய்யப்படும்.

5.மாநகர எல்கை பகுதிகள் குறிப்பாக நிதி ஆதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு லூர்தம்மாள்புரம் பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படும்.

6.திடக்கழிவு மேலாண்மை விதிகளை நடைமுறைப்படுத்தும் வகையில் புதிதாக மூன்று நுண் உர செயலாக்க மையமும் (MCC) ஒரு ஆர் ஆர் சி RRC)யும் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

7.பொதுவெளியில் குப்பைகள் கொட்டப்படும் இடங்கள் தூய்மை பகுதியாக அடையாளம் காணும் வகையில் மாற்றம் செய்யப்படும்.

8. மாநகரின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐந்து இடங்களில் சமுதாயக் கழிப்பறை மற்றும் பொதுக் கழிப்பறைகள் நவீன முறையில் அமைக்கப்படும்

9.துப்புரவு பணியாளர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப தொழில் நுட்ப பயிற்சிகள் வழங்கப்படும்.

10.தெரு நாய்களின் பெருக்கத்தை விரைந்து கட்டுப்படுத்தும் வகையில் உரிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள ஏதுவாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

வருவாய் பணிகள்

1. மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் விரிவுபடுத்தப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களின் வசதிகளுக்காக கூடுதலாக நான்கு இடங்களில் வரி வசூல் மையங்கள் ஏற்படுத்தப்படும்.

2.சொத்து வரி, குடிநீர் கட்டணம், பெயர் மாற்றங்கள் ஒரே விண்ணப்பத்தின் மூலம் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,

3.மாநகராட்சியின் வாகன காப்பகங்களில் கட்டணம் செலுத்தும் முறை நவீன மயமாக்கப்பட்டு எளிதாக்கப்படும்.

4.மின்னனு பணப்பரிமாற்றம் மூலம் வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்விப் பணிகள்

1.மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் சரளமாக ஆங்கிலம் பேசும் வகையில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

2.மாநகராட்சிக்கு சொந்தமான ஜின் பேக்டரி சாலை, சண்முகபுரம், தெற்கு புதுத்தெரு ஆகிய பள்ளிகளுக்கு கூடுதல் கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும்.

3.சமூக கூட்டான்மை பொறுப்பு நிதியின் கீழ் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் சிவந்தா குளம் நடுநிலைப்பள்ளிக்கு நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் கட்டப்படும்.

4.மாநகர பகுதிகளில் இளம் சிறார்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய 9 அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்படும்.

நகரமைப்பு பணிகள்

1.மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து பொதுவெளி திறவிடங்கள் வேலியிட்டு மரங்கள் நடப்பட்டு பாதுகாக்கப்படும்

பொதுநலன் சார்ந்த பணிகள்

1. மாநகர பகுதிகளில் வாழும் படித்த இளைஞர்கள் அரசு போட்டி தேர்வில் பங்கு பெற்று பயன் பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய பயிற்சி மையம் விரைவில் திறக்கப்படும்.

2.இளைஞர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் நவீன காலத்திற்கு ஏற்ப சிறு செயற்கை புல் கால்பந்து மைதானம் (Turf) அமைக்கப்படும்.

3. ராஜாஜி பூங்கா அம்மா உணவகத்தில் பொதுமக்கள் குறிப்பாக அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் உள்புற நோயாளிகள் நலன் கருதி மலிவு விலையில் இரவு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

4.தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை உடனிருந்து கவனிக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஓய்வு எடுக்கும் வகையிலான காத்திருப்பு அறைகள் மேற்படி மருத்துவமனையின் அருகாமையில் அமைக்கப்படும்.

5.தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்புகள் தமிழ் நாடு அரசின் Start up Agency முலம் நடத்தப்படும்.



Last Updated by Mervin on2025-03-01 01:16:25

Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE