தூத்துக்குடி மாவட்டம் பிடாரம் அருகே புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் 15-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் சார்பில் இன்று வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஆனந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியின் போது மாணவ மாணவிகள் வாக்களிப்போம் நூறு சதவீதம் வாக்களிப்போம் வாக்களிப்பது நமது உரிமை என கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் .
பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபஸ்டின் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீரங்க பெருமாள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.....