தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-01-24 09:21:56
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடைபெறுவதாக தூத்துக்குடி கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ் குமார் இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் இனிகோ நகர் கடற்கரை பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்

அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த (IND TN12 MO3714) பைபர் படகில், வேனில் இருந்து மூட்டைகளை ஒருவர் ஏற்றி கொண்டிருந்தார். அங்கு சென்று போலீசார் சோதனையிட்டபோது இலங்கைக்கு கடத்த 29 மூட்டை பீடி இலைகள் (கட்டிங் இலை) 30 கிலோ எடை கொண்ட 14 மூட்டை பீடி சுமார் 1200கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக பீடி இலை மூட்டைகளை கைப்பற்றிய கியூ பிரிவு போலீசார், மேலும், இனிகோ நகரைச் சேர்ந்த ப்ளோரன்ஸ் மகன் ராபின்சன் (25) என்பவரை கைது செய்தனர்.

மேலும் பீடி இலை மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட IND TN12 MO3714 பைபர் படகு மற்றும் KL04 N51012என்ற டெம்போ டிராவலர் வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட  பீடி இலைகளின் மதிப்பு சுமார் 50 இலட்சம் ரூபாய் ஆகும்



Last Updated by Mervin on2025-01-24 15:28:44

Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE