தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு பழைய கிராமப் பகுதி முழுவதும் புதிய பேவர் பிளாக் அமைக்கும் பணியினை பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.கே. கமால் தீன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி 11வது வார்டு உறுப்பினர் சங்கரேஸ்வரி ராம்குமார், பணி ஆய்வாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், இந்த நிகழ்வில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முத்து, அசோக் குமார், பாலசிங், பிச்சமுத்து, பேரூராட்சி மன்ற பணியாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.