தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக 70 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.70 லட்சம் மதிப்பிலான 3000ஆயிரம் கிலோ புளி, பட்டாசு மற்றும் நரம்பு வலி மாத்திரைகள் பறிமுதல், தூத்துக்குடி சுங்கத்துறை துணை கமிஷனர் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தூத்துக்குடி இனிகோநகர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக சில மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், இனிகோநகர் கடற்கரை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சுமார் 70 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி கோட்ட சுங்கத்துறை துணை கமிஷனர் மற்றும் அதிகாரிகள் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அதில் 70 லட்ச ரூபாய் மதிப்பிலான தலா 50 கிலோ எடையுள்ள 60 மூட்டைகளில் 3 ஆயிரம் கிலோ புளி மறைத்து வைக்கப்பட்டது. மேலும் 10 மூட்டைகளில் பட்டாசு மற்றும் நரம்பு வலி மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அதிகாரிகளை கண்டதும் தப்பிச்சென்ற கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.