அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு
தூத்துக்குடி கயத்தாறு
By Mervin on | 2025-01-26 18:40:11
அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சிவஞானபுரம் ஊராட்சி வாகைக்குளம் கிராமத்தில் சாலையில் நடுவே மின் வயர் அறுந்து கிடந்துள்ளது

இந்நிலையில் இன்று (26-01-2025 ) காலை அந்த வழியாக நடந்து சென்ற அந்த கிராமத்தைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் கழுத்தில், மின்வயர் சிக்கி மின்சாரம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கயத்தார் போலீசார் முருகனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்



Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE