தூத்துக்குடியில் வருகின்ற 25ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தூத்துக்குடி நகர மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 25.01.2025 சனிக்கிழமை அன்று அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி,
மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், திரேஷ்நகர் ஹவுசிங் போர்டு காலனி, குமரன் நகர், காமராஜ் நகர், டேவிஸ்புரம் , ஜாகீர் உசேன் நகர், சுனாமி நகர், நேரு காலனி கிழக்கு, ஜீவா நகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கோயில்பிள்ளை விளை, ஆரோக்கியபுரம், கிருஷ்ணராஜபுரம், டி.சவேரியார்புரம், மாதாநகர், ராஜாபாளையம், சிலுவைபட்டி, மேலஅரசடி, கீழ அரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம் பணையூர், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டிணமருதூர், உப்பள பகுதிகள், பனையூர், ஆனந்தமாடன் பச்சேரி, வாழசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம், மேலஅலங்காரதட்டு, கீழஅலங்காரதட்டு, மாணிக்கப்புரம், பூபாலராயர் புரம், குருஸ்புரம், ராமர்விளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.