தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மெய்ஞானபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் இடையே பொதுப்பாதை பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட பாதை தொடர்பாக திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து கண்ணனை ஓட ஓட விரட்டியுள்ளார்.
இந்த காட்சிகள் தற்போது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் குறித்து மெய்ஞானபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ஒருவரை ஓட ஓட அரிவாளால் விரட்டி வெட்ட முயன்ற இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இந்த சம்பவத்தால் மெய்ஞானபுரம் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.