முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். விடுமுறை தினங்களில் பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த நிலையில் புது வருடத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
அதிகாலை முதலே கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் நீராடி நாழிக்கிணற்றில் குளித்து விட்டு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் இலவச தரிசனம், கட்டண தரிசனம், முதியவர்கள் தரிசனம் என அனைத்து தரிசனங்களும் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் அதிகாலை 1 மணி முதல் குடும்பத்துடன் வரிசையில் காத்திருந்து வருகின்றனர். இதனை 7 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதிக அளவிலான பக்தர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
மேலும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் காலை முதலே கடற்கரையில் நீராடி வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் திருச்செந்தூர் கோவில் வளாகம், வள்ளி குகை பகுதி, பேருந்து நிலையம், கடற்ரை பகுதிகளில் பக்தர்களின் கூட்டமாக காட்சியளிக்கிறது.