தூத்துக்குடி மாநகர பகுதிக்கு உட்பட்ட தென்பாகம் மற்றும், வடபாகம் காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆய்வாளர்கள் மாணிக்கராஜ் மற்றும் சுப்புராஜ், ஆகியோர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிரிவு உபசார விழா கொடுக்கும் வகையில் டவுண் ஏஎஸ்பி மதன் (ஐபிஎஸ்) கொடுத்த சர்ப்ரைஸ் மூலம் போலீசார் மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்கு முக்காடினர்.
தூத்துக்குடி நகர காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் டாக்டர் மதன் ஐபிஎஸ் இவர் பொறுப்பேற்ற தினத்தன்று டவுண் பகுதியில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. டவுண் பகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் விரோத காவலர்கள் முதல், ஆய்வாளர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு அறிவுரைகள் வழங்கி சமூக செயல்களைஷஅடியோடு ஒழித்து பொது மக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கும்வகையில் செயல்பட வேண்டும் என அவர்களை அரவணைப்போடு பணி செய்யக்கூடியவர் மதன். இதனால் டவுண் பகுதியில் பணியாற்றும் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை உற்சாகத்துடனும், துணிச்சலுடனும் பணியாற்றி வருகின்றனர். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த மாணிக்கராஜ், அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு திறம்பட செயல்பட்டவர். அவர் தற்போது புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு பணி மாறியுள்ளார். அதுபோல் வடபாகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ் ஐ சுப்புராஜ் சிப்காட் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி டவுண் பகுதியில் பணியாற்றி வந்த 2 எஸ். ஐ-க்களும் தற்போது ரூரல் பகுதிக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன் தனது அலுவலகத்திற்கு இரண்டு எஸ்ஐ-க்களையும் வரவழைத்து அவர்களுக்கு பிரிவு உபசார விழா நடத்தினார்.
ஈஎஸ்பி மதன் இரண்டு எஸ்ஐ-க்களும் கீழ் பணிபுரிந்த போது அவர்கள் செய்த செயல் பணிகளை சுட்டிக்காட்டி அதற்கு பாராட்டியதோடு, தற்போது பணியிடம் மாறுதல் செல்லும் இடங்களிலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். பின்னர் 2 எஸ்.ஐ. களுக்கும், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் எஸ்பி அலுவலகத்தில் வைத்து உதவி ஆய்வாளர்கள் 2 பேரையும் வைத்து கேக் வெட்டப்பட்டு பிரிவு உபசார விழாவை சிறப்பித்தார் மதன் ஐபிஎஸ். தனக்கு கீழ் பணிபுரிந்த சார்பு ஆய்வாளர்கள் பணி மாறுதல் சென்றாலும் அவர்களை மரியாதை செய்தும், கவுரவப்படுத்தியும், ஊக்கப்படுத்தியும் வழியனுப்பிய தூத்துக்குடி நகர உதவி காவல் கண்காணிப்பாளரின் செயல் பாராட்டுக்குரியது. காவல்துறைக்கு தன் ஐபிஎஸ் பங்கு மணி மகுடம் என டவுண் பகுதியில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பாராட்டி வருகின்றனர்.