வீரமங்கை வேலுநாச்சியாரின் 295வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் வீரமங்கை வேலு நாச்சியாரின் 295வது பிறந்தநாள் விழா மாநகர தமிழக வெற்றி கழகம் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
போராளி மணிராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில், மாநகர நிர்வாகிகள் ஜி.ஆனந்தகுமார், (முன்னாள் கவுன்சிலர்), கே. சுகந்தி கார்த்திக், (மகளிரணி)
எம் இக்னேஷியஸ், ஜே.ஏ.சி ராஜா, பெனி, கார்த்திக், கண்ணன், சிரியா, செல்வக்குமார் கே.கௌசல்யா, அபர்ணா கிங்ஸ்டன், மற்றும் இளைஞரணியைச் சேர்ந்த சரவணராஜ், முருகன், சுந்தர், அருண்குமார், தங்கராஜ், கணேஷ் ராஜ், கௌதம், ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.