தூத்துக்குடியில் காவலர் நல்வாழ்வு பயிற்சி வகுப்பு - மாவட்ட எஸ்பி துவக்கி வைத்து அறிவுரை வழங்கினார்
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-02-28 18:41:00
தூத்துக்குடியில் காவலர் நல்வாழ்வு பயிற்சி வகுப்பு - மாவட்ட எஸ்பி துவக்கி வைத்து அறிவுரை வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினருக்கான காவலர் நல்வாழ்வு பயிற்சி வகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப  இன்று  துவக்கி வைத்து சிறப்பாக பயிற்சி பெறுமாறு காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில்  காவல்துறையினருக்கான ‘காவலர் நல்வாழ்வு பயிற்சி வகுப்பு தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தீபு மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மேற்படி பயிற்சி வகுப்பின் முதல் நாளான இன்று (28.02.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து காவலர்களின் மனநலன் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து ஆலோசனைகள் வழங்கி இப்பயிற்சி வகுப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரைகள் வழங்கினார்.

இந்த பயிற்சி வகுப்பு வார இறுதியில் 2 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் முதல் நாளான இன்று காவலர் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை 75 காவல்துறையினர் கலந்து கொண்டனர். இதில் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மீகா, தூத்துக்குடி மனநல மருத்துவர் டாக்டர். சிவசைலம், உதவி பேராசிரியர் மரிய தங்கம், மற்றும் மாவட்ட காவல்துறை அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரி ராமானுஜப் பெருமாள் ஆகியோர் காவல்துறையினரின் பணிகள், மனநலன் மற்றும் உடல் ஆரோக்கியம், உணவு மற்றும் உணவு கட்டுப்பாடுகள் வங்கிகளில் காவல்துறையினருக்கான சம்பளத் தொகுப்பு (Police Salary Package) குறித்தும் காப்பீடுகளின் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்து  காவல்துறையினருக்கு பயிற்சியளித்தனர்.



Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE