தூத்துக்குடி முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் (26.01.2025) 76 வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சாண்டி கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர் எஸ்.பி.சாண்டி.பி.இ., தலைமை தாங்கி மூவர்ண கொடி ஏற்றி வைத்து குடியரசு தின உரையை நிகழ்த்தினார். விழாவில் கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் ஜோஸ்வா, வினோத் முன்னிலை வகித்தனர். சாண்டி கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் எஸ்.பி.சாண்டி மரங்கன்றுகள் நட்டினர். கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாக அதிகாரி வீரராஜன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் ஜோஸ்சசிகுமார் நன்றியுரை வழங்கினார்.