தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாநகர திமுக பிரதிநிதிகள் கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
அதில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி உதவிகளை செய்ய வேண்டும் என்பதில் எந்த விதமான முறைகளும் செய்யலாம். அதன்படி பொதுமக்களுக்கு அரசு சார்ந்த உதவி மாநகராட்சி சார்பிலான உதவி செய்து கொடுக்கலாம் இந்தியாவில் முதன்மை முதல்வராக தலைவர் விளங்குகிறார். 5 முறை கலைஞர் முதலமைச்சராக பணியாற்றி வருகிறாா். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் இருந்து தான் ஜிஎஸ்டி வரி அதிகம் ஒன்றிய அரசுக்கு செல்கிறது அதிலும் நமக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. தமிழகத்திலிருந்து ஒன்றிய அரசிற்கு செல்லும் வருமானத்தை நிறுத்துவதற்கு எவ்வளவு நேரமாகும். தலைவர் ஏற்கனவே கூறியுள்ளாா். தமிழகத்தில் 94 டோல்கேட்கள் அதன் மூலம் ஓராண்டுக்கு 2500 கோடி வசூல் செய்கின்றன. வருமான வாயித்துறையினர் மூலம் பல கோடியும் தூத்துக்குடி துறைமுகம் கடந்த ஆண்டு 1200 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது. ஆனால் அதற்கான பல கட்டமைப்பு பணிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்தியா முதன்மை மாநிலமாக வேண்டும். என்ற அடிப்படையில் நாம் சரி என்று பொறுத்துக்கொள்வதால் ஓன்றிய அரசு தொடர்ந்து பீஹா ஆந்திரா உள்ளிட்ட அவர்களுக்கு சாதகமான மாநிலத்திற்கு மட்டும் உதவி செய்கின்றனர். தாய் மொழியை அழித்து மற்ற மொழியை ஏற்க வேண்டும் என்பதை தமிழகம் ஓரு நாளும் ஏற்றுக்கொள்ளாது. ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைந்தது இரண்டாவது முறையாக தளபதியாா் முதலமைச்சராக வேண்டும்.
எடப்பாடி ஒரு கோமாளி அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை பலபோராட்டங்களை கண்டு எழுச்சியடைந்த திமுக வரலாறு தொியாமல் அண்ணாமலை பேசி வருகிறான். அவனுக்கு இறுதி கட்ட எச்சாிக்கை. இந்த தூத்துக்குடியில் இருந்து தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் வகையில் ஒட்டு மொத்தமாக திமுகவினர் பதிலடி கொடுக்க வேண்டும். இந்த மண் யாருக்கும் குறைந்த மண் அல்ல வடக்கு மாவட்டத்திலுள்ள 3 தொகுதிகளும் வெற்றி பெற அனைவரும் சூளுரை ஏற்போம். என்று பேசினாா்.