ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போராடுபவர்களை தேசபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் -அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கோரிக்கை.!
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-02-22 21:00:56
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போராடுபவர்களை தேசபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் -அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கோரிக்கை.!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி அன்று தன்னெழுச்சியாக நடைபெற்ற பேராட்டத்தில் 14 அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாக்கபட்டன. அதன்பிறகு தமிழக அரசு, உச்சநீதிமன்றமும் ஆலையை திறக்க தடைவிதித்து கடந்த 7வருடங்களாக மூடி இருக்கும் நிலையில், ஆலையை திறக்க வேண்டும் என தற்போது ஆலை நிர்வாகத்தின் தூண்டுதல் பேரில் போராடுவது பொதுமக்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் விதமான உள்நோக்கம் உள்ளதாக உள்ளது.

மேலும், அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் எதிரானதாகவும் உள்ளது. ஆகவே அவர்கள் மீது தேசபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பொதுமக்கள் சார்பாக தூத்துக்குடி மாவட்ட மக்கள் நல அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் BA.LLB கோரிக்கை விடுத்துள்ளார்.



Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE