தூத்துக்குடி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகளின் சார்பில் தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவிற்கு ஊரக வளர்ச்சி திட்ட கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா தலைமை வகித்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி பெர்னாண்டோ, வரவேற்புரையாற்றினாா். மாவட்ட ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் அலுவல் காயத்ரி, திட்ட விளக்கவுரையாற்றினாா்.
குத்துவிளக்கேற்றி 205 காப்பிணி தாய்மாருக்கு 10 வகையான சீா்வைசை பொருட்களை வழங்கி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இன்றையதினம் மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடியில் 205 கர்ப்பிணி தாய்மார்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் அனைவருக்கும் ஓரு மகிழ்ச்சி ஏற்படும் போது நானும் மகிழ்ச்சியடைகிறேன். கர்ப்பிணி தாய்மார்கள் கருவுற்ற நாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அந்த காலக்கட்டத்தில் குழந்தையும் வளர்ச்சியடையும் நேரத்தில் வளையல் அணியும் போது அந்த ஓசைகளும், அதே போல் கொலு ஓசைகளும் கேட்கும்போது குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த காலக்கட்டத்தில் உயரிய நோக்கில் அவர்களுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தாய்மை என்பது புனிதமானது மற்றும் அற்புதமானது. குழந்தையை பெற்று வளர்ப்பதில் முழுமையான பொறுப்பு பெண்களிடம் உள்ளது. அதை நம்மால் தவிர்க்க முடியாது. பெண்களால் தான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். நல்லதொரு பிள்ளையை பெண்களால்தான் உருவாக்க முடியும் என்பதற்காக வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள நீங்கள் அனைவரும் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது வேண்டும்.
பத்து மாதம் கஷ்டப்பட்டு குழந்தையை பெற்றெடுக்கிறீர்கள். இந்த காலகட்டங்களில் உங்களுக்கு சில உணவு வகைகள் பிடிக்காமல் போகும். ஆனால் கர்ப்பகாலங்களில் சாப்பிடாமல் இருக்கக்கூடாது. ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் தான் வயிற்றில் வளரும் குழந்தையும் நல்ல ஊட்டச்சத்தோடு பிறக்கும். அந்த காலக்கட்டத்தில் உங்களது எடை 10 கிலோ அதிகப்படுத்தினால் தான் குறைந்தது 3 முதல் 3½ கிலோ எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்து அக்குழந்தைகளை முழுமையான உடல் தகுதியுடன் நன்றாக வளர்க்க முடியும். குறிப்பாக கர்ப்பகாலங்களில் முட்டை, பால், பழங்கள், பாசிப்பயிறு, தட்டைப்பயிறு உள்ளிட்ட தானிய வகைகள் மற்றும் சத்தான உணவு வகைகளை நாம் சாப்பிடும்போது நாமும் ஆரோக்கியமாக இருப்போம் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பேறுகாலத்தின் போது எந்த பிரச்சனையும் இருக்காது.
மேலும் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரங்களில் தாய்ப்பால் நன்றாக கொடுக்கும் போது தான் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் அதன் பின் இணை உணவுகளான கீரை, பருப்பு, கஞ்சி, பழங்கள் உள்ளிட்டவை உணவுகளை கொடுக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் இளம் தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு குறித்து உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் அறிகுறிகள் தென்படும் குழந்தைகளுக்கு தொடக்க நிலையிலேயே அதாவது இரண்டு வயதிற்குள் கண்டுபிடிக்கும் பொழுது அதை நம்மால் சரிசெய்ய முடியும். இப்போது உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு மற்றும் ஓய்வு வேண்டும். அதேபோன்று குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் குழந்தைக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சத்துமாவினை தினமும் பயன்படுத்த வேண்டும் கேட்டுக்கொள்வதோடு, அனைத்து தாய்மார்களும் அருகாமையிலுள்ள அரசு மருத்துக்கல்லூரி கர்ப்பிணி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து, சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்று, உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் நாளிலிருந்து 1000 நாட்கள் முக்கியமான நாட்களாகும் குழந்தை பிறந்ததிலிருந்து ஓவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்லும் போது மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும் 2வயதை கடந்து விட்டால் கொஞ்சம் பாரம் குறைந்துவிடும். அந்த காலக்கட்டத்தில் நமது பணி முக்கியமானது. என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி, அவர்களுக்கு 5 வகையான உணவுகளை பரிமாறி மகிழ்ந்தார்