அரசு நிலங்களை பாதுகாக்க தவறும் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர்.! போலி ஆவணங்களை ரத்து செய்து நடவடிக்கை எடுப்பாரா.?.
தமிழ்நாடு தஞ்சாவூர்
By Mervin on | 2025-02-19 10:55:02
அரசு நிலங்களை பாதுகாக்க தவறும் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர்.!  போலி ஆவணங்களை ரத்து செய்து நடவடிக்கை எடுப்பாரா.?.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அத்திவெட்டி கிழக்கு எல்லைக்குட்பட்ட கோவில்காடு கிராமத்தில் உள்ள சர்வே எண் 535 மற்றும் 536 ஆனது அரசு நில ஆவணமாக உள்ளது. இதில் அரசு நிர்வாகம் சார்பிலான திட்ட அலுவலகங்கள், நீர்த்தேக்க பயன்பாட்டு கட்டிடங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது அவ்விடம் பொதுமக்களின் பல்வேறு பயன்பாட்டு வகை இடமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அத்திவெட்டி கிழக்கு கோவில்காடு பகுதியை சேர்ந்த முருகையன் மற்றும் ரேவதி என்பவர் கடந்த 23.06.2017 அன்று கண்ணுச்சாமி மகன் ராசு யாருடைய குத்தகை ஆவணங்களை காட்டி (சர்வே எண்: 429/1A2) ஒரே நில ஆவணங்களை சர்வே எண்: 535/34 மற்றும் சர்வே எண்: 536/23 ஆக இரண்டு போலி ஆவணங்களாக உருவாக்கி கடந்த 2017ஆம் ஆண்டு & 2021ஆம் ஆண்டு மதுக்கூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்கள் (1483/2017 ) (1154/2021 ) உருவாக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. அரசின் பயன்பாட்டு நில வகைகளை போலி ஆவணங்களை காட்டி தனது சொந்த இடம் என ஆக்கிரமித்து உள்ளதாக கோவில்காடு கிராம பொதுமக்கள் தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சியரிடம் அரசு நிலத்தை தனி நபரிடம் இருந்து மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில நேற்று அத்திவெட்டி கிராமம் கோவில்காட்டை சேர்ந்த வினோத் என்பவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்த புகார் (மனு எண்: 2025/9005/21/438486/0217 தேதி: 17.02.2025 ) மனுதாரர் தெரிவித்ததாவது: பல தலைமுறையாக அந்த இடம் பொதுமக்களின் பயன்பாடாக இருந்து வருகிறது, தற்போது திடீரென வந்து முருகையன் என்பவர் அந்த இடத்தை சுற்றி வேலி அமைத்துக் கொண்டு இது என் இடம் கூறி வருகிறார் உண்மையில் அந்த அரசு இடம். அந்த இடத்துக்கும் அவருக்கும் தொடர்பில்லை, கடந்த 2017 ஆம் ஆண்டு கண்ணுசாமி மகன் ராசு என்பவரின் ஒரே இடத்தை கணவன், மனைவி என இரண்டு பேர் .பேரில் போலி ஆவணங்களாக உருவாக்கி விட்டு தற்போது அந்த போலி நில ஆவணங்களை காட்டி மிரட்டி அரசு நிலங்களை ஆக்கிரமித்து உள்ளதாக தெரிவித்தார்.

இதுத் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உதவியாளரிடம் அரசு நில ஆக்கிரமிப்பு தொடர்பாக பேசியபோது தாலுகா அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி அரசு நிலமாக இருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் உடனடியாக பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் விரைந்து விசாரணை நடத்தி அத்திவெட்டி கிராமம் கோவில்காடு பகுதியில் முருகையன் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்டு. பொதுமக்களின் செயல்திட்ட பணிக் கட்டிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அரசு நிலத்தை மீட்பரா.? பட்டுக்கோட்டை கோட்டாட்சியர்.!



Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE