தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு அதிகாலையில் உணவு வழங்கப்பட்டது.
தொழில் நகரமாக தொழில் நகரமான தூத்துக்குடிக்கு பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் தூத்துக்குடியில் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு அதிகாலையில் உணவு கிடைப்பது மிகவும் சிரமத்திற்கு உள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் ஜமாத் சார்பில் பாதுஷா சஹர் கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் ரமலான் மாதம் 30 நாட்கள் இலவசமாக சஹர் உணவு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு தூத்துக்குடி பாதுஷா சஹர் கமிட்டி சார்பில் இஸ்லாமியர்களுக்கு சஹர் உணவு சிறப்பாக வழங்கப்படுகிறது. அதிகாலையில் தினமும் சுமார் 700க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சஹர் உணவு சாப்பிட்டு நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வேலை காரணமாக இங்கு தங்கி இருப்பவர்களுக்கு சஹர் உணவு எந்த சிரமமும் இல்லாமல் கிடைப்பதற்காக தொடர்ந்து 15 ஆண்டுகளாக வெகு சிறப்பாக வழங்கப்பட்டு வருவதாக அமைப்பாளர்கள்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் பாதுஷா சஹர் கமிட்டி தலைவர் மீராசா மரைக்காயர், செயலாளர் எம் எஸ் எப் ரகுமான், ஜாமியா பள்ளிவாசல் துணைத்தலைவர் சிராஜ், மற்றும நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.