கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த திறமைகளை காட்ட பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் ஹாக்கத்தான் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு 1½ லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த திறமைகளை காட்ட தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் கலந்து கொள்ளும் சைபர் ஹாக்கத்தான் (சைபர் ஹேக்கத்தான்) போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கு பெறுபவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், ஒன்றிலிருந்து மூன்று குழுக்களாகவும், (அணி அளவு 1- 3) சுயதொழில் செய்பவர்களாகவும் (இலவச பணியாளர்கள்), நிறுவனங்கள் (தொழில்நுட்ப நிறுவனங்கள்) மற்றும் தரவு விஞ்ஞானிகளாகவோ (Data Scientist and Coders, Programmers) இருக்கலாம். மேலும் இப்போட்டி 6 தலைப்புகளில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு https://linktr.ee/hackathon2025 என்ற மின்னஞ்சல் முகவரியில் அல்லது கொடுக்கப்பட்டுள்ள QR குறியீடு மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 09.03.2025 ஆகும். முதல் கட்ட வெற்றியாளர்கள் குறித்து 11.03.2025 அன்று அறிவிக்கப்படும். முதல் கட்ட வெற்றியாளர்கள் தங்களது முன்மாதிரி படைப்புகளை 28.03.2025 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இறுதிப்போட்டி 04.04.2025 அன்று நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 1½ லட்சம் பரிசாக வழங்கப்படும்.
மேலும் இப்போட்டி குறித்த தகவல்களைப் பெறுவதற்கு ccpstut@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியோ அல்லது 9498207845 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம்.