முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா - தூத்துக்குடியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-03-01 21:05:40
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா  - தூத்துக்குடியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்

தமிழக முதல்வர் மு. ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி 4வது வார்டு திமுக சார்பில் சுந்தரவேல் புரம் பகுதியில் இனிப்புகள் வழங்கப்பட்டது. கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து, தெப்பக்குளம் அருகில் உள்ள ட்ரூத்ஃபுல் மனவளர்ச்சி குன்றியோர்க்கான பராமரிப்பு மற்றும் பயிற்சி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு காலை மற்றும் மதியம் உணவுகளை வட்டச் செயலாளர் வழக்கறிஞர் ச.சதீஸ்குமார் வழங்கினார்

நிகழ்வில், சந்திரசேகர், மாமன்ற உறுப்பினர் நாகேஸ்வரி, வினோத், கண்ணன், கருப்பசாமி, கணபதி, அன்பரசன், காசி, பி.எஸ்.ராஜா, மாரி கிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், தங்கமணி, செல்வகுமார் முனியசாமி செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE