தூத்துக்கு:டிடி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க மாநில வர்த்தக அணி சார்பில் மறைந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் வடக்கு, கிழக்கு பகுதியில் நடத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் டூவிபுரத்திலுள்ள மாநில வர்த்தக அணி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித செல்லப்பாண்டியன் தலைமை வகித்து பேசுகையில், அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர் காலம் தொட்டு ஜெயலலிதா காலம் இருந்து இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற தலைவர்களாக இருந்து வருகிறார்கள். அதன் பின்னர் 3ம் தலைமுறை பொதுச்செயலாளராக எடப்பாடியார் 4 ஆண்டுகாலம் நல்லாட்சி செய்தாா் என்பது நாட்டிற்கே தெரியும் இனி வரும் காலங்களில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகளோடு மக்கள் பணியாற்ற வேண்டும். 2026 தோத்தல் எல்லோருக்கும் முக்கியமான காலகட்டமாகும் அந்தத் தேர்தலில் மீண்டும் எடப்பாடியை முதலமைச்சராக்க அனைவரும் சபதம் ஏற்று களப்பணியாற்ற வேண்டும். உண்மையாக உழைக்கின்ற அனைவருக்கும் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று பேசினாா்.
கூட்டத்தில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ்குமாா், முன்னாள் நுகாவோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், முன்னாள் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் சகயராஜ், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், பகுதி எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர், புல்டன் ஜெசின், மாவட்ட பிரதிநிதி ஜெடியம்மா, வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ஜெனோபர், ராஜா, அந்தோனி ராஜ், முன்னாள் வட்ட செயலாளர் மோகன், வட்ட பிரதிநிதிகள் பெலிக்ஸ், ராஜ்குமார், மகாராஜன், பிபிலாம்மாள், ஜிபிலியா, மற்றும் சங்கர், மணிகண்டன், ஜேசராஜ், வெங்கடாசலம், ராஜசேகர், ஜோதிகா மாரி, ரெக்ஸி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.