தூத்துக்குடியில் இயங்கிவரும் நற்செய்தி நடுவத்தின் பல்சமய உரையாடல் பணிக்குழு மற்றும் பொதுநிலையினர் பணியகத்தின் பெண்கள் பணிக்குழு சார்பில் பல் சமய பெண்கள் தினவிழா மற்றும் அய்யா வைகுண்டரின் 193வது ஆண்டு அவதார தினவிழா கொண்டாடப்பட்டது.
இந்திய அரசியல் அமைப்பு சாசன முகப்புரை வாசித்தலுடன் துவங்கிய விழாவில் மைக்லின் மேரி அனைவரையும் வரவேற்றார்.
அய்யா வழியில் பெண்கள் விடுதலை என்னும் தலைப்பில் அய்யா வழி இயக்கத்தின் கிருஷ்ணவேணியும், இஸ்லாமியப் பார்வையில் பெண்கள் என்னும் தலைப்பில் தூத்துக்குடி விஸ்டம் அகாடெமி முதல்வர் காயத்ரியும், கிறிஸ்தவ பார்வையில் பெண்கள் என்னும் தலைப்பில் தூத்துக்குடி மரியன்னை மகளிர் கல்லூரி தமிழ் பேராசிரியை எழிலரசியும் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து உழைக்கும் பெண்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் தூத்துக்குடி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ் நிகழ்த்திய தலைமையுரையில் பெண்கள் எப்போதும் குடும்பத்திலும் சரி, பணியிடத்திலும் சரி தங்களைச் சுற்றியுள்ள நேர்மறையானவற்றை மட்டுமே எடுத்துக் கொண்டு எதிர்மறையானவற்றை தூக்கியெறிந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் பணிகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி பேசினார்.
முன்னதாக பல்சமய பெண்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.
தொடர்ந்து விளையாட்டு போட்டிகளும், குழு கலந்துரையாடல்களும் நடைபெற்றன.
இறுதியாக பெண்கள் பணிக்குழு செயலர் சசிகலா நன்றியுரை கூற, அனைவருக்கும் அய்யா வழி இயக்கத்தின் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட நற்செய்தி நடுவத்தின் பல்சமய உரையாடல் பணிக்குழுவினரும், பொது நிலையினர் பணியகத்தின் பெண்கள் பணிக் குழுவினரும் சிறப்பாக செய்திருந்தனர்.