கோவை மாவட்டத்தில் சமூக ஆர்வலர்கள் எச் ஐ வி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தனர்.
கோவை ஆர் என் டி மென்பொருள் கணினி நிறுவன பணியாளர்கள் ராஜேஷ் குமாரின் தலைமையில் கோவை அருகில் உள்ள, எச் ஐ வி தொற்றினால் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தேவையான உதவிகள் குறிப்பாக மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், உடை மற்றும் சத்தான உணவுகள் போன்றவற்றை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஆர் என் டி நிறுவன பணியாளர்கள் அனைவரும் அவரவர் குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை கோவை விடியல் அறக்கட்டளை இயக்குனர் மு பிரபாகரன் சிறப்பாக செய்திருந்தார்.