தூத்துக்குடியில் அரசு வேலைவாய்ப்பு - கலெக்டர் இளம்பகவத் அறிவிப்பு
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-02-18 13:01:33
தூத்துக்குடியில் அரசு வேலைவாய்ப்பு - கலெக்டர் இளம்பகவத் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின்கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிறது. இதில் கூடுதலாக பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம்சாரா)-பாதுகாப்பு அலுவலர்(நிறுவனம் சாரா பராமரிப்பு) பணியிடம் 1 தொகுப்பூதியம் ரூ.27,804/-என்ற அடிப்படையிலும், சிறப்புசிறார்காவல் அலகிற்கு 2 சமூகப்பணியாளர்கள்(சமூக பணியாளர்) பணியிடம் 1ற்கு ஒரு மாதத்திற்கு ரூ.18,536/- என்ற அடிப்படையிலும் தொகுப்பூதியம் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் மிஷன் வத்சல்யா (மிஷன் வத்சல்யா) வழிகாட்டு நெறிமுறைகளின்படி கீழ்கண்ட தகுதிகளைக் கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 பாதுகாப்புஅலுவலர் (நிறுவனம்சாரா)

பாதுகாப்பு அதிகாரி (நிறுவனம் சாரா பராமரிப்பு) - w-01

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி / சமூகவியல் குழந்தைகள் மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம் / உளவியல் / மனநலம் / சட்டம் / பொது சுகாதாரம் | சமூக வள மேம்பாடு ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற வேண்டும்.

அல்லது சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் மேம்பாடு /மனித உரிமைகள் / பொது நிர்வாகம் / உளவியல் / மன நலம் / சட்டம் / பொது சுகாதாரம் ஆகியவற்றில் 2 வருடங்கள் அனுபவம் கொண்ட அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (10-2.3 அமைப்பு) கணினியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 14.02.2025 அன்று 42 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சமூக பணியாளர்கள் (சமூக பணியாளர்)-02

சமூகப்பணி (சமூகப்பணி), சமூகவியல்(சமூகவியல்), சமூகஅறிவியல்(சமூக அறிவியல்) ஏதேனும் ஒருபாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் (10.2.3 அமைப்பு) மேலும் கணினி இயக்குவதில் திறன் இருத்தல் அவசியம். 14.02.2025 அன்று 42 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். குழந்தைகள் நலன் பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தூத்துக்குடி மாவட்ட இணையதளமான www.thoothukudi.nic.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 28.02.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் அல்லது நேரடியாகப் பதிவுசெய்தபால் வாயிலாகவோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 176, முத்துசுரபி பில்டிங், மணிநகர் பாளை ரோடு, தூத்துக்குடி 628 003 . தொலைபேசி எண்: 0461 2331188 என்ற முகவரிக்கு கிடைக்கப்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.



Last Updated by admin on2025-03-04 23:52:12

Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE