தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் சைலேஷ். (44) இவர் இதற்கு முன்பு சிவகிரி காவல் நிலையத்தில் பணியாற்றிய போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுத்தொடர்பாக அந்த இளம்பெண் புளியங்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக புளியங்குடி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று நாகர்கோவில் பகுதியில் பதுங்கி இருந்த போலீஸ்காரர் சைலேஷை கைது செய்தனர்.