தூத்துக்குடி மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலம் - மேயர் ஆணையர் பங்கேற்பு
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-01-11 18:07:09
தூத்துக்குடி மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலம் - மேயர் ஆணையர் பங்கேற்பு

தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு தலைமை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தமிழர் திருநாளான பொங்கல் விழா சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட வேண்டும் என அரசுத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 2 அடுப்புகளில் பானைகள் வைக்கப்பட்டு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் உள்ளிட்ட பொங்கல், கரும்பு, மஞ்சள், மற்றும் பல வகையான காய்கனி வகைகள் படையலுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பொங்கல் பானையில் அரிசியிட்டு சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

பின்னர், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான பானை உடைத்தல், மியூசிக்கல் சேர், லக்கி நம்பர், பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல், முறுக்கு கடித்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், வாயில் டியூஸ்பூன் மூலம் எலும்பிச்சை பழம் வைத்து ஓடுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியே நடைபெற்றது. சிலம்பாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி நிர்வாக வளர்ச்சிக்கு அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுவோம், அனைவரும் தூய்மையை கடைபிடிப்போம் என வலியுத்தும் வகையில் பெண்கள் கோலாட்டம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழாவில் மாநகராட்சி மேயர், ஆணையர், அலுவலக பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டனர். மாநகராட்சி அலுவலக கட்டிடங்கள் முழுவதும் தோரணங்கள் கட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்டிருந்த மின்னொளிகளால் ஜொலித்தன.


நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி பொன்னத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், ரெங்கசாமி, கனகராஜ், சுரேஷ்குமார், சரவணக்குமார், ஜெபஸ்டின் சுதா, ராஜதுரை, பட்சிராஜ், விஜயகுமார், சரண்யா, சோமசுந்தரி, மரியகீதா, நாகேஸ்வரி , முத்துவேல், பவானி மார்ஷல், மெட்டில்டா, காந்திமணி, ராஜேந்திரன், ஜாக்குலின்ஜெயா, தனலட்சுமி, தெய்வேந்திரன், சுயம்பு, ரெங்கசாமி, ஜான், அதிர்ஷ்டமணி, ராமகிருஷ்ணன், ஜெயசீலி, ரிக்டா, பேபி ஏஞ்சலின், சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, பாப்பாத்தி, மகேஸ்வரி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஏடிண்டா, கற்பக, சந்திரபோஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள். முத்துமாரி, தனலெட்சுமி, மதிமுக கவுன்சிலர் ராமுஅம்மாள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், இணை ஆணையர் சரவணக்குமார், உதவி ஆணையர்கள் சுரேஷ்குமார், கல்யாணசுந்தரம், பாலமுருகன், வெங்கடராமன், உதவிபொறியாளர்; சரவணன், நகரமைப்புத் திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர் அஹமது, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் மச்சாது, வட்டச்செயலாளர் ரவீந்திரன், வட்ட பிரதிநிதிகள் அருணகிரி, சுகாதார ஆய்வாளர் மார். ராஜசேகர், ஸ்டாலின் பாக்கியநாதன், நெடுமாறன், இளநிலை பொறியாளர் சேகர், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் மற்றும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு துறை சார்ந்த பணியாளர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

பின்னர் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை முன்னிட்டு தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.



Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE