மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, தூத்துக்குடி அய்யனாபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் நாளை வியாழக்கிழமை (ஜன.9) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாப்பிள்ளையூரணி, ஜோதிநகா், திரேஸ்புரம், வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, குமரன்நாகாா், காமராஜ்நகா், டேவிஸ்புரம், சாகிா்உசேன் நாகா், சுனாமிநகா், நேருகாலனி கிழக்கு, ஜீவாநகா், லூா்தம்மாள்புரம், தாளமுத்துநகா், கோயில்விளை, ஆரோக்கியபுரம், ராஜபாளையம், டி.சவேதாப்பிள்ளை முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழ அரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம், பனையூா், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டினமருதூா், உப்பளப் பகுதிகள், ஆனந்தமாடன்பச்சேரி, வாழசமுத்திரம், மேலமருதூா், அ.குமாரபுரம், மேல-கீழ அலங்காரத்தட்டு, எஸ்எஸ். மாணிக்கபுரம், பூபாலராயபுரம் ஆகிய பகுதிகளில் விநியோகிக்கப்பட்டது. இருக்காது என நாகப்புற செயற்பொறியாளர் (பொறுப்பு) எல். சின்னத்துரை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.