தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய கூட்டாம்புளி பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான புதுக்கோட்டை பூதம்மாள்புரம் தெற்கு தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் சதீஷ்குமார் (25), சாயர்புரம் தெற்கு கோவன்காடு பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் ராஜ்குமார் (24), முத்தையாபுரம் பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் சேர்மபாண்டி (29) மற்றும் குரும்பூர் சேதுக்குவாய்த்தான் பகுதியைச் சேர்ந்த சேதுபதி மகன் நிஷாந்த் (எ) சடையசூர்யா (22) ஆகியோரை இன்று (06.01.2025) புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.