தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த வேன் நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்து ரூ.5 லட்சம் சேதம் ஆனது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் முனியசாமி (28), லோடு வேன் டிரைவர். இவர் வேனில் லோடுகளை ஏற்றுக் கொண்டு புதியம்புத்தூர் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென வேனின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்ததால் உடனடியாக அவர் வேனை நிறுத்தி பார்த்துள்ளார்.
அப்போது வேன் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் வேன் முற்றிலும் எரிந்து சேதமானது. இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் உதவி ஆய்வாளர் சீதாராமன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.