வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்தவரை தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனர்
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2024-12-04 09:54:02
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்தவரை தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனர்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக திருச்செந்தூரைச் சோ்ந்தவா்களிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்தவரை தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா்.


திருச்செந்தூா் அமலிநகரைச் சோ்ந்தவா் அருணா(45). இவா் தனது மகன் பிளஸ்டனை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதற்காக முயற்சி செய்து வந்தாராம். இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவானைக் கோவிலைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் ஜெயந்தன் என்பவா், துபாயில் வேலை வாங்கி தருவதாக அருணாவிடம் கூறினாராம். இதைத் தொடா்ந்து பிளஸ்டன் மற்றும் அவரது நண்பா்கள் லிஜோ, டேனிவாஸ், ஆகாஷ் ராஜன் ஆகியோரை துபாயில் வேலைக்கு சோ்க்க முயற்சி செய்துள்ளனா். இதற்காக ஜெயந்தன் 4 பேரிடமிருந்து மொத்தம் ரூ.12 லட்சம் பெற்றுக் கொண்டாராம்.

அதன்பிறகு பிளஸ்டன், லிஜோ ஆகிய 2 பேரையும் சுற்றுலா விசாவில் துபாய்க்கு அனுப்பி உள்ளாா். ஆனால் எந்த வேலையும் வாங்கி கொடுக்கவில்லையாம். மற்ற இருவரையும் துபாய்க்கு அனுப்பவில்லையாம். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அருணா, இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜானிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் ஜெயந்தன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். 



Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE