முதலமைச்சர் முக.ஸ்டாலின் லட்சியத்தை தொகுதி பொறுப்பாளர்கள் நிறைவேற்ற வேண்டும்- பாளை தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமாாிடம் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் வேண்டுகோள்
தமிழ்நாடு சென்னை
By Mervin on | 2024-12-02 09:33:17
முதலமைச்சர் முக.ஸ்டாலின் லட்சியத்தை தொகுதி பொறுப்பாளர்கள் நிறைவேற்ற வேண்டும்- பாளை தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமாாிடம் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் வேண்டுகோள்

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று ஒரு இலக்கை நிர்ணயித்து சட்டமன்ற தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். அந்த குழுவில் மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, திமுக அமைப்பு செயலாளர் பாரதி, ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்

இந்நிலையில் தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் பார்வையாளர்களின் பொறுப்பாளர்கள் பட்டியலை திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மாநில திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தொிவித்தார். 

அப்போது துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், “திமுக தலைமைக்கும், தமிழக முதலமைச்சர் மு.க.லினுக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும். தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும், நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே தலைவர் கூறியபடி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் புதுச்சேரியில் இருந்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்திய கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு களப்பணியாற்றுங்கள் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நல்ல எதிர்காலம் நிச்சயம் அமையும் என்று கலந்துரையாடலின் போது துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் கூறினார்.


Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE