போலீஸாருக்கு பஸ் பாஸ் - டிச.16-க்குள் அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு
தமிழ்நாடு சென்னை
By Mervin on | 2024-12-02 10:49:32
போலீஸாருக்கு பஸ் பாஸ் - டிச.16-க்குள் அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு

போலீஸாருக்கு ஸ்மாட் காடு வழங்குவது தொடா்பாக டிசம்ப் 16-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உயா் அதிகாரிகளுக்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குனா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

தமிழகத்தில் அரசு பேருந்தில் போலீசார் அலுவல் ரீதியாக பயணம் செய்வதற்கு எந்தவொரு அடையாள அட்டையும் வழங்கப்படாமல் இருப்பதினால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக அரசு பேருந்து நடத்துநா்களும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம்,மோதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, அரசு பேருந்துகளில் மாவட்டத்திற்குள் பயணம் செய்யும் வகையில் காவலா் முதல் ஆய்வாளா் வரை நவீன அடையாள அட்டை (ஸ்மாா்ட் காா்டு) வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்தாா்.

அதன்படி மாநிலம் முழுவதும் 3,191 ஆய்வாளர்கள், 8,245 உதவி ஆய்வாளர்கள், 1,13,251 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், இரண்டாம் நிலைக் காவலர்கள் என மொத்தம் 1,24,867 பேருக்கு ஸ்மாட் காடு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.29.96 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ஒரு மாதத்துக்கு ரூ.2.49 கோடி செலவிடப்படுகிறது.

காவலர்களுக்கு வழங்கப்படும் ஸ்மாட் காடு மூலம் நகர பேருந்துகள், புகா பேருந்துகள் ஆகியவற்றில் பயணம் செய்யலாம். ஏசி பேருந்துகளிலும்,அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் ஸ்மாட் காடு வழியாக பயணம் செய்ய அனுமதி கிடையாது 

சொந்த மாவட்டத்துக்குள் மட்டும் ஸ்மாா்ட் காா்டு மூலம் காவலா் பயணிக்கலாம். வாரண்ட் உத்தரவு நடவடிக்கைக்கு செல்லும் போலீசார், மாநிலம் முழுவதும் பயணம் செய்யலாம். இந்த திட்டத்தின்படி ஒரு காவலருக்கு மாதத்துக்கு ரூ.200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு இத்திட்டத்துக்கான நிதியை ஒதுக்கியுள்ள நிலையில், இந்தத் திட்டத்துக்கு தகுதியானவர்களைக் கண்டறிந்து டிசம்ப் 16-ஆம் தேதிக்குள் நிலை அறிக்கையை அனுப்புமாறு அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநரும் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அரசு வாகனங்களை வைத்திருக்கும் போலீசார், ஸ்மாட் காடு திட்டத்துக்கு தகுதியானவர்கள் கிடையாது என்றும் சங்கா் ஜிவால் அறிவுறுத்தியுள்ளாா்.


Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE