கோவில்பட்டியில் வீட்டில் கை குழந்தையுடன் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸ் துரத்தியபோது தப்பி ஓடியதில் காலில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டு சிகிச்சைக்கு அனுமதி. மற்றொரு இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் பகுதியில் கைக் குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்து வந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி புகுந்து போதையில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுத்தொடர்பாக கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணை நடத்தினார்
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு தடயவியல் மற்றும் கைரேகை பிரிவு அதிகாரிகள் வருகை தந்து தடயங்களை கைப்பற்றினர். மேலும் மோப்பநாய் சுனோ வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக வீரவாஞ்சி நகர் பகுதியை சேர்ந்த மாரிசெல்வம், மாரியப்பன் ஆகிய இரு இளைஞர்களை போலீசார் தேடிவந்த நிலையில் ரகசிய தகவல் தகவலின்பேரில் குற்றவாளிகள் பதுங்கி இருந்த வீரவாஞ்சி நகர் மலைப்பகுதிக்கு சென்றபோது போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற மாரியப்பன் கீழே இதில் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாரியப்பனை சுற்றி வளைத்த போலீசார் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மாவுக்கட்டு போடப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. சம்பவத்தில் தொடர்புடைய மாரி செல்வம் என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதன் காரணமாக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் 50 பேர் மேலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்