தூத்துக்குடியில் 14 கிலோ கஞ்சாவுடன் பெண் உள்பட இருவா் கைது
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-02-22 09:28:50
தூத்துக்குடியில் 14 கிலோ கஞ்சாவுடன் பெண் உள்பட இருவா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக பெண் உள்பட இருவரை போலீஸார் கைது செய்து 14 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலத்திலிருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, தூத்துக்குடி போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளா் எழில்சுரேஷ் சிங் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் அனிதா வேணி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் முருகன், மல்லிகா உள்ளிட்ட போலீஸார் தூத்துக்குடி 3ஆவது மைல் அருகே நேற்று ரோந்து சென்றனர்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், தஞ்சாவூரை சோ்ந்த தனலட்சுமி(56), மதுரை சிலோன்காலனியை சோ்ந்த முருகன்(58) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை தூத்துக்குடிக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், இருவரிடமிருந்தும் மொத்தம் 14 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.



Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE