புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு திரையை மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
தூத்துக்குடி ஶ்ரீவைகுண்டம்
By Mervin on | 2025-01-11 18:25:24
புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு திரையை மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்கற்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் அதன் கண்காணிப்பு திரையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்கற்குளம் பகுதியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து அப்பகுதிகளில் மொத்தம் 24 சிசிடிவி கேமராக்கள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு திரையை புதிதாக நிறுவியுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் மற்றும் அதன் கண்காணிப்பு திரையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று (11.01.2025) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிசிடிவி கேமரா பொருத்துவதின் அவசியம் குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அப்பகுதி மக்களுக்கு எடுத்துரைத்து  விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சிசிடிவி கேமராக்கள் வைப்பதற்கு ஏற்பாடு செய்த ஆழ்வார்கற்குளம் இளைஞர்களையும் வெகுவாக பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  ராமகிருஷ்ணன் , ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர்  பத்மநாப பிள்ளை உட்பட காவல்துறையினர் மற்றும் ஊர் இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE