நேற்று கட்சியை ஆரம்பித்துவிட்டு இன்று நான் முதலமைச்சராக போகிறேன் என்றெல்லாம் பேசிக்கொண்டு வருகிறார்கள் - தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சா் கீதாஜீவன் பேச்சு
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2024-11-30 18:09:23
நேற்று கட்சியை ஆரம்பித்துவிட்டு இன்று நான் முதலமைச்சராக போகிறேன் என்றெல்லாம் பேசிக்கொண்டு வருகிறார்கள் - தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சா் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி திமுக மாநில இளைஞர் அணிசெயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளா் சி.எம்.மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் பிரதீப் ராதாகிருஷ்ணன், மகேந்திரன், பாரதி, ஜோசப் அமல்ராஜ், ஆகிேயார் முன்னிலை வகித்தனர். மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், வரவேற்புரையாற்றினார்.

150 அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஓரு பிாிட்ஜ், தையல் மிஷின்3, கிரைண்டர் 2, இஸ்திாிபெட்டி 2, சைக்கிள் 1, ஆகியவைற்றை வழங்கி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் எனது பிறந்தநாளை ஆடம்பரம் இல்லாமல் ஆட்டம் பாட்டம் இல்லாமல், நலத்திட்ட உதவிகள் வழங்கி மக்கள் பயன்பெற வேண்டும். என்று மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 தொகுதிகளிலும் வாா்டுகள் முதல் ஓன்றியம் வரை பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. உதயநிதியை பொறுத்தவரை தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பயிற்சி பாசறை நடத்தி அதன்மூலம் கட்சி பணியையும் மேற்கொண்டவர் அதன்பிறகு கட்சி பொறுப்பு மற்றும் ஆட்சி பொறுப்புக்கு வந்தபிறகு செய்த பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியது மட்டுமின்றி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார் உதயநிதி என்று புகழாரம் சூட்டியுள்ளார். 1949க்கு முன்பு யாரும் தோலில் துண்டு போட முடியாது. இடுப்பில் தான் கட்டிக்கொள்ள வேண்டும். சில பகுதிகளுக்கு செல்லும் போது காலில் அணிந்திருக்கும் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு தான் குறிப்பிட்ட சில பகுதிகளை கடந்து செல்ல வேண்டும். குற்றாலத்தில் குளிப்பதற்கு அனுமதி இல்லாத நிலை இருந்தது. அதன் மூலம் பல்வேறு பாதிப்புகளை சந்தித்த காலக்கட்டத்தில் தந்தைபொியாா் காலம் தொட்டு 1949ல் திமுக தொடங்கப்பட்டு  பிறகு கடந்த கால நிகழ்வுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு கல்வி வேலைவாய்ப்பு உருவாக்கி ஜாதிமதம் பற்றி பார்க்காத நிலை உருவாக்கப்பட்டது எங்கும் ஜாதி பெயர் கொண்ட முத்திரை இல்லாமல் அனைத்து தரப்பினரையும் ஓரே பார்வையுடன் பாாக்கப்பட்டது. இதுபோன்ற வரலாறுகள் எல்லாம் தொியாமல் நேற்று கட்சியை ஆரம்பித்துவிட்டு இன்று நான் முதலமைச்சராக போகிறேன் என்றெல்லாம் பேசிக்கொண்டு வருகிறார்கள். தமிழர்களின் திருநாளான பொங்கல் அன்று ஓன்றிய அரசு சிஏ தேர்வை அறிவித்துள்ளது. தற்போது எதிர்ப்புக்கு பின் மாற்றியுள்ளது. ஹிந்தி படிப்பவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை. ஹிந்தி தினிப்பதை தான் எதிர்க்கிறோம். தமிழ் மொழியும் ஆங்கிலமும் பிரதான மொழிகளாக இருந்து வருவதன் மூலம் மக்கள் நன்மையடைந்து வருகின்றன. தமிழ்நாடு எல்லாதுறையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இங்கு இருக்கின்ற மாணவர்கள் இதுபோன்ற பல வரலாறுகளை தெரிந்து கொள்வதற்கு புத்தகங்களை படிக்க வேண்டும். விளையாட்டு அவசியம் இந்த வயதில் கல்லும் கரையும் அப்படிபட்ட பருவம் இது உதயநிதி இந்த துறைக்கு பொறுப்பேற்ற பின் சென்னை விளையாட்டுதுறையின் தலைநகரமாக மாறியது மட்டுமின்றி 234 தொகுதிகளிலும் விளையாட்டு அரங்கம் உருவாக்கப்பட்டு பல கிராமங்களில் விளையாட்டு துைறயையும் உருவாக்கி வருகிறாார். இதுபோன்ற நல்ல பழக்க வழக்கங்களை மாணவர்கள் கடைபிடித்துக் கொண்டு தேவையில்லாத தீயபழக்கத்திற்கு ஆளாகமல் நல்ல சிந்தனையுடன் வாழ்வில் வளர்ச்சியடைய வேண்டும் 2026ல் நடைபெறவுள்ள தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு அனைவரும் பணியாற்றிட வேண்டும் என்று பேசினார்.

விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமாா், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, அருணாதேவி, நாகராஜன், பார்வதி, குருராஜ், மருத்துவ அணி துணை தலைவர் ஜீடி, மகளிர் அணி தலைவர் தங்கம், ஓன்றிய செயலாளர்கள் சின்னமாாிமுத்து, ராமசுப்பு, பேரூர் செயலாளர் வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூாிதங்கம், இராஜா, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரவி, பிரவீன்குமாா், செல்வின், சங்கரநாராயணன், மகளிா் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, கலைஇலக்கிய அணி துணை அமைப்பாளர் சீதாலட்சுமி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமாா், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், இலக்கிய அணி தலைவர் சக்திவேல், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், சட்டமன்ற தொகுதி தகவல்தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அண்ணாதுரை, அஸ்வின்துரை, வைதேகி, ஸ்ரீதர், கரண்குமாா், அருணாதேவி, மகேந்திரன், ஹாிஹரன், கற்பகம், சுேரஷ்குமாா்,  கவுன்சிலர்கள் விஜயகுமாா், ஜான்சிராணி, தெய்வேந்திரன், மாவட்ட பிரதிநிதி செல்வக்குமாா், வட்டச்செயலாளர்கள் கங்காராஜேஷ், பத்மாவதி, கதிரேசன், சதிஷ்குமாா், செல்வராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூா்யா, செந்தூர்பாண்டி, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், புஷ்பராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர். போல்பேட்டை பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா பொியசாமி நன்றியுரையாற்றினார்.

பாக்ஸ்: கலைஞர் அரங்கம் முன்புள்ள கலைஞர் சிலைக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து அமைச்சர் கீதாஜீவன் மாியாதை செய்த வணங்கினார். மாநிலம் முழுவதும் திமுக சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மண்டல அளவிலான பயிற்சி வழங்கப்பட்டு 17 ஆயிரம் போ் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் நடைபெற்ற இறுதிபோட்டியில் 192 பேர் அந்த குழுவின் சாா்பில் தேர்வு செய்யப்பட்டவர்களில் 2 பேர் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தை சேர்ந்த முத்தையாபுரம் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் செந்தூர்பாண்டி மற்றும் சஞ்சய், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து கூட்டத்தில் இருவருக்கு பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் சால்வை அணிவித்து கௌரவித்தாா்.


Last Updated by Mervin on2024-12-05 07:42:49

Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE