அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய சிறப்பு தத்துவ மையம் நடத்தும் தொட்டில் குழந்தை அறை திறப்பு மற்றும் குழந்தைகள் தத்தெடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உள்ள அடைக்கலாபுரத்தில் தேசிய தத்தெடுப்பு மாதம், நவம்பர் மாதத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அலெக்ஸ் தொட்டில் குழந்தை அறை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். குழந்தை தத்தெடுப்பு நிகழ்ச்சிக்கு அருட்தந்தை பிரெமில்டன் லோபா தலைமை தாங்கினார் .
தொடர்ந்து தூய சூசை அறநிலைய குழந்தைகள் மற்றும் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகளை தத்தெடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு நாடகத்தை தத்துரூபமாக நடத்திக் காட்டினர்.
இந்நிகழ்ச்சியில் அருள்பணி மேரியா,செட்ரிக் பீரிஸ், அந்தோணி பிரஜித், ஜேமஸ், திரு இருதய சபை அருட் சகோதரிகள், புனித அன்னாள் சபை அருட் சகோதரிகள்,மற்றும் குடும்பத்தார் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை சமூகப் பணியாளர் வில்சன் பிச்சை சிறப்பாக செய்திருந்தார்.