தூத்துக்குடி அருகே காணாமல் போன தொழிலாளி, அங்குள்ள தோட்டத்து கிணற்றிலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மனோகரன்(45). இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனா். மதுப்பழக்கம் காரணமாக குடும்பத்தை விட்டு கடந்த 2 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தாராம். இவரை கடந்த 14ஆம் தேதி முதல் காணவில்லையாம். இந்நிலையில், புதியம்புத்தூா் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் சடலம் மிதப்பதாக புதியம்புத்தூா் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், சடலமாக மிதந்தவா், காணாமல்போன மனோகரன் என்பது தெரியவந்தது.
சடலத்தை போலீஸாா் மீட்டு, உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்