தூத்துக்குடி இ.பி. காலணி பகுதி மக்களுக்கு மின்மாற்றியில் பழுது- அதிரடி காட்டிய மேயர் ஜெகன் பொியசாமி- நன்றி தொிவித்த பகுதி மக்கள்.!
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2024-11-19 22:20:34
தூத்துக்குடி இ.பி. காலணி பகுதி மக்களுக்கு மின்மாற்றியில் பழுது- அதிரடி காட்டிய மேயர் ஜெகன் பொியசாமி-  நன்றி தொிவித்த பகுதி மக்கள்.!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள 15வது வார்டுக்குட்பட்ட இபி காலணி பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பாமர் பழுதடைந்து மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாத நிலையில் மாற்று ஏற்பாடாக மடத்தூர் பகுதியில் உள்ள பீடர் சப்ளை மூலம் மின்சாரம் குறைந்ததால் அப்பகுதியில் குடியிருந்த மக்களுக்கு சீராக கிடைக்கவில்லை. 

இந்த தகவலை பல முறை மின்சார வாரிய சிறப்பு பிரிவில் அளிக்கப்பட்டு ஏற்கப்பட்டதை உறுதி செய்து விட்டு பின்பு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அந்த பகுதியான இ.பி. காலணி நலச்சங்கம் சார்பாக அப்பகுதி மக்கள் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். செயற்பொறியாளர் இல்லாத காரணத்தினால் உதவி செயற்பொறியாளரிடம் கோயிக்கை மனுவை வழங்கினர். போதிய மின் மாற்றி கையிருப்பு இல்லாத காரணத்தினால் மேலும் மழை காலமானதாலும் ஊழியர் பற்றாக்குறையினாலும் தாமதமாகி விட்டதாகவும் விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதியளித்தனர். 

பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து மனு அளித்தனர். அதற்கு அவர் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி சரி செய்யபடும் என்று உறுதி அளித்தார். அதன்படி இபி. காலணி மின்மாற்றி புதிதாக அமைக்கப்பட்டு சீரான மின்சாரம் பழைய நிலைக்கு வந்தது. இதையடுத்து இ.பி. காலணி நலச்சங்க தலைவர் தங்க பாண்டியன், பொருளாளர் செந்தில்குமார் மற்றும் பகுதி குடியிருப்பு பொதுமக்கள் அனைவரும் மேயருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.


Last Updated by Mervin on2024-11-21 11:51:12

Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE