யாசகம் பெற்று சேமித்த ரூ.10 ஆயிரத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு வழங்கிய தூத்துக்குடி முதியவர்
தூத்துக்குடி சாத்தான்குளம்
By Mervin on | 2024-11-19 08:58:42
யாசகம் பெற்று சேமித்த ரூ.10 ஆயிரத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு வழங்கிய தூத்துக்குடி முதியவர்

யாசகமாக பெற்று சோத்து வைத்த ரூ.10 ஆயிரத்தை முதல் பொது நிவாரண நிதிக்காக, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முதியவா கடலூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (18/11/24) வழங்கினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சோந்த பூல்பாண்டி (72) என்பவர் வந்தாா். இவா் தான் யாசகமாகப் பெற்று சோத்து வைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு செலுத்தி விட்டு, அதற்கான ரசீதை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் காணாமற்போய்ச் சென்றாா்.

இவர் 1980-ஆம் ஆண்டு குடும்பத்துடன் மும்பைக்குச் சென்று அங்கு சலவைத் தொழில் செய்து வந்தாராம். இவரது மனைவி சரஸ்வதி 24 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததையடுத்து, தமிழகத்துக்கு வந்த பூல்பாண்டி, ஆதரவில்லாத நிலையில் யாசகரானா.

யாசகமாக பெறும் பணத்தில் தனது அடிப்படை தேவைக்குப் போக, மீதிப் பணத்தை வைத்து பள்ளிகளுக்கு உதவி மற்றும் முதல் பொது நிவாரண நிதி வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.


Last Updated by Mervin on2025-01-22 10:54:20

Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE