தூத்துக்குடியில் கலைஞர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையை பயனாளிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2024-11-19 15:43:18
தூத்துக்குடியில் கலைஞர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையை  பயனாளிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

தூத்துக்குடி.
உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது.
ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் (ஜனவரி 2022 முதல்) பயன்பெற்று வருகிறார்கள்.
இத்திட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும். இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 14வது வார்டு தேவர் காலனியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் வைத்து நடைபெற்ற கலைஞர் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் விழாவிற்கு மாநகராட்சி பணிக்குழு தலைவரும், மாநகர திமுக துணைச்செயலாளருமான கீதா முருகேசன் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பயனாளிகளுக்கு காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டையை வழங்கி நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

விழாவில் வட்டச்செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்


Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE