சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதியான 4வது வார்டுக்குட்பட்ட அம்பேத்கார் நகர் 47வது வார்டுக்குட்பட்ட லயன்ஸ்டவுண் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று அமைச்சரை அப்பகுதி மக்கள் முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்ததை அடுத்து அப்பகுதியில் புதிய கட்டிட பணிகள் தொடங்குவதற்கான ஆய்வுகளை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் சமூக நலத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். எல்.என்.டி நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி மூலம் புதிய அங்கன்வாடி கட்டப்படுகிறது.
ஆய்வின்போது மாநகர தி.மு.க ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், வட்ட செயலாளர்கள் சூசைஅந்தோணி, சதீஷ்குமார், கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், நாகேஸ்வரி, எல்.என்.டி நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் ராஜசேகர், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், தி.மு.க அவை தலைவர் முனியசாமி வட்ட செயலாளர் பிரதிநிதி பாஸ்கர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி பெர்னாண்டோ, மாவட்ட ஒருங்கிணைந்த திட்ட அலுவலர் (பொறுப்பு) காயத்ரி மற்றும் கருணா, மணி, ஆல்பர்ட் உட்பட பலர் உடன் இருந்தனர்.