துமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க மாநகராட்சி பகுதியில் உள்ள நான்கு மண்டல அலுவலகங்களிலும், புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி மில்லர்புரத்தில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். துணை ஆணையர் ராஜாராம், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: இந்த மேற்கு மண்டலத்தில் 4-வது வாரமாக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த மண்டலத்தில் 251 மனுக்கள் பெறப்பட்டதில் 245 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதி 6 மனுக்களில் ஆவணங்கள் குறைக்கப்பட்டதால், அதை நிறுத்தி வைத்துள்ளோம். குறைகள் தீர்க்கப்பட்டதும் முழுமையாக அந்த மனுக்களுக்கும் தீர்வு காணப்படும். தமிழக முதலமைச்சரின் சீறிய திட்டமான “மக்களுடன் முதல்வர்” ஊராட்சி பகுதியில் நடைபெறுகிறது. இந்த மாநகராட்சியிலும் பலர் இ-மெயில் மூலம் குறைகளை தெரிவித்து வருகின்றனர். மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள புகார் பெட்டியில் மனுக்கள் மூலமாக குறைகளை தெரிவித்தனர். இருப்பினும் சில குறைகளை தீர்ப்பதற்கு மண்டல அலுவலகத்திற்குதான் வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனால் ஒவ்வொரு புதன்கிழமையும் மண்டல அலுவலகங்களில் சுழற்சி முறையில் நடைபெறுகின்ற குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
குறிப்பாக முதல் கூட்டத்தில் 100 மனுக்களும், இரண்டாவது கூட்டத்தில் 75 மனுக்களும், மூன்றாவது கூட்டத்தில் 51 மனுக்களும் பெறப்பட்டுள்ளன. இன்று பெறப்படும் மனுக்களில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். மற்ற மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்குப் பக்கிள் ஓடை 6 கி.மீ தூரம் தூர்வாரும் பணிகளும், உப்பாத்து ஓடை பகுதியில் இதைபோல் தூர்வாரும் பணிகளும் நடைபெறுகின்றன. இந்த மண்டலத்திற்குட்பட்ட பல பகுதிகளில் புதிதாக சாலைகளும், கால்வாய் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவில், கல்லூரி உள்ள பகுதிகளில் முழுமையாக சாலை பணிகளை செய்துள்ளோம். அனைத்து பகுதிகளிலும் முறையாக பணிகள் நடைபெறும் என்று கூறினார். 34வது வார்டு கவுன்சிலரும், பணிநியமனக்குழு உறுப்பினருமான சந்திரபோஸ் அளித்த மனுவில் கடந்த மழைக்காலத்தில் எனது வார்டு பகுதியான பசும்பொன் நகர், 3வது மைல், புதுக்குடி, கந்தன்காலனி, ஆசிரியர் காலனி, தபால்தந்தி காலனி, அசோக்நகர், ராஜீவ்நகர், தேவகி நகர் ஆகிய தெருக்களில் மழை வெள்ளம், சாலை, சூறாவளி போன்ற பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்டனர். எனவே மழை நீரானது வடிகாலுக்கு செல்லும் வகையில் மழைக்காலம் வருவதற்குள் ஆய்வு செய்து வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
முகாமில்: பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் மகேந்திரன், மாநகராட்சி சுகாதார நகர் நல அலுவலர் வினோத்ராஜா, ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மண்டல தலைவர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், இசக்கி, சரவணராஜா, ராமர், கனகராஜ், விஜயலெட்சுமி, பொன்னப்பன், கந்தசாமி, ஜாண். , வட்ட செயலாளர் சுப்பையா, வட்ட பிரதிநிதி ஜெபகுமார் ரவி, மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர் மருதபெருமாள், பி.ஜே.பி.பொய்சொல்லான், போல்பேட்டை பகுதி தி.மு.க பிரதிநிதி ஜோஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் 15 வார்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதி குறைகளை மனுக்களாக வழங்கினர்.